Colombo Fort, Sri Lanka
 

உலக அறிவு கிராமத்திற்கு ஜனாதிபதியின் புதிய திட்டம் அமுல்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் முதவாவது அறிவகம்

Colombo Fort Nenasala
ஜனாதிபதியின் அறிவகத்திட்டத்தை உபயோகப்படுத்தும் பெண்மணி.

கிராரத்திற்கும் நகரத்திற்கும் பாலமாக அமைந்திருப்பதுதான் கோட்டை புகையிரத நிலையம். இவ்விடத்தில் ரயில்வரும் வரை காத்திருப்போரின் தொகை ஆயிரக்கணக்காகும்.

இந்த நேரத்தை விண்டிக்காது உலக நடப்பை தெரிந்துகொள்வதற்கும், தனது கணினி அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் மற்றும் பல உபயோகங்களுக்குமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் புகையிரத பயணிகளின் நலன் கருதி நெனசல நிலையம் ஒன்று நிறுவப்பட்டிருக்கிறது.

ரயில் வரும்வரை இரும்பு நாற்காலிகளில் அமர்ந்து நேரத்தை வீண்டிக்காமல் நெனசலவிற்குச் சென்று அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள், புகையிரத நிலையத்தில அமைந்திருக்கும் நெனசல நிலையத்தில் கணினி அடிப்படைக் கல்வி மற்றும் உங்கள் நிறுவனங்களின் விளம் பரங்களையும் மிக குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ள முடியும்.

நெனசல என்றால்? ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தரிசனமான ஆயிரம் அறிவகம் எனும் திட்டத்தை இலங்கை தகவல் மற்றும் தெடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் நடை முறைப்படுத்துகிறது. இந்நிறுவனம் ஸ்ரீலங்கா எனும் தேசிய அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரதான அரச நிறுவனமாகும்.

அறிவகம் என்ற தலைப்பின் கீழ் நெனசல (Nenasala) என்ற பெயரில் உலக அறிவை கிராமத்திற்குக் கொண்டுசெல்லும் ஒரு புதிய முயற்சியை குறிக்கோளாகக் கொண்டு இந்த நிறுவனம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதன்மூலம் நாடு முழுவதும் 1000 நெனசல நிறுவனங்களை அமைத்து, இதன்மூலம் தொடர்பாடல் தொழில்நூட்ப அறிவை மேம்படுத்த இம்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதுவரைக்கும் 360 நெனசலக்களை நிறுவியுள்ளது. இதை தனிமனிதர் ஒருவர் நடத்திக் கொண்டுபோவதற்குரிய வசதிகளையும் வழங்கியிருக்கிறது.

ஒரு நெனசலவிற்கு நான்கு கணினிகள், ஸ்கேனர், பிரின்டர், பக்ஸ்,, தொலைபேசி, வலையமைப்பை உபயோகிப்பிற்குத் தேவையான இணைப்பு மற்றும் தளபாடங்கள் போன்றவற்றை இலவசமாகக் கொடுத்து இச்செயற்பாட்டை நடத்திவருகிறது.

தகவல் மற்றம் தொடர்பாடல் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்ரீலங்கா திட்டத்தில் வரப்பிரசாதங்களை கிராம மக்களுக்குப் பெற்றுக்கொடுத்து, கிராமங்களைக் கட்டியெழுப்பும் நோக்குடன் அறிவகம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இது கிராம மட்டத்தில் தகவல் மற்றும் தொடர்பால் தொழில் நுட்பத்தின் வரப்பிர சாதங்களைப் பெற்றுக்கொடுக்கும் நிலையங்களை நாடெங்கும் நிறுவுவதன் மூலம் நகரப் பகுதிகளிலிருந்து மிகத் தொலைவில் வாழும் கிராம மக்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அனுகூலங்களைப் பெற்றுக்கொடுப்பதே அறிவகம் நிறுவப்பட்டதன் நோக்கமாகும்.

Colombo Fort Nenasala
கோட்டை புகையிரத நிலையத்தில் அமைந்திருக்கும் நனசல நிலையம்.

இதன் அனுகூலங்கள் பல்வேறுப்பட்டவை, கிராம்ப் பிரதேச மக்களுக்கு இணையத்தள பாவணை வசதியைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம், அவர்கள் மத்தியிலும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப சேவை பாவணையை ஊக்குவித்தல், தனிமைப் படுத்தப்பட்ட மற்றும் ஓரங்கட்டப்பட்ட நிலைகளிலிருந்து கிராம மக்களை தொடர்பாடல் இணைப்புகள் மூலம் மீட்டல், கிராம

சமூகங்களுக்கும், அரச அதிகாரிகள், அபிவிருத்தி நிறுவனங்கள், தொழில்சார் நிபுணர்கள், கல்விமான்கள் போன்றோருக்கு மிடையே உள்ள இடைவெளியை குறைத்தல், அதனூடாக அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் போன்றன இதன் சில அனுகூலங்களாகும்.

அறிவக நிலையங்களில் கல்வி, விவசாயம், மருத்துவம், மீன்பிடி போன்ற பல்வேறு துறைகளுக்கும் தேவையான தகவல் சேவை, உள்ளூர் மற்றும் வெளியூர் தொலைபேசி வசதி, செய்மதி தொழில்நுட்பத்தில் இணைய சேவை, தகவல் தொழில்நுட்பப் பயிற்சி போன்றவற்றை இந்நிலையத்திற்கு விஜயம் செய்வதன்மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

All about Colombo
  • Colombo of Those Days
  • Colombo: A Melting Pot of Beliefs
  • Colombo - A Short History
  • Visiting Cultural Colombo
  • Historic Colombo Fort
  • Colombo of Those Days
  • Complete Guide to Colombo Fort
  • Bustle & Beauty of Colombo Fort
  • Colombo Fort Today
  • Colombo by Night
  • Colombo-1 Fort
  • Galle Face Green
  • Old Galle Face
  • Colombo-2 Slave Island
  • Colombo-3 Kollupitiya
  • Colombo-4 Bambalapitiya
  • Colombo-6 Wellawatte
  • Colombo-7 Cinnamon Gardens
  • Colombo-8 Borella
  • Colombo-9 Dematagoda
  • Colombo-10 Maradana
  • Colombo-11 Pettah
  • Colombo-13 Kotahena
  • Fort Railway Station
  • Fort Railway Station Time Table
  • All Sri Lanka Train Schedule
  • Reservation of Train Accommodation
  • Colombo-Kandy-Badulla Line
  • Colombo-Galle-Matara Line
  • Colombo-Vavuniya, Trinco & Batticaloa
  • Train Travel in Sri Lanka
  • How Ceylon Railways Began
  • Railways of old Ceylon
  • Railways of Sri Lanka
  • Narrow Gauge trains back in service
  • Sri Lanka's Hill Country by Train
  • All Sri Lanka Bus Routes
  • Emergency Phone Numbers
  • All Sri Lanka Postal Codes
  • Fort Railway Station Telecenter
  • Nenasala@FortRailwayStation
  • Nenasala@FortRailway in the News
  • E-Channelling at Fort Railway Station
  • Colombo Colleges
  • Ananda College
  • Bishops College
  • Ladies' College
  • Royal College
  • St. Joseph's College
  • St. Peter's College
  • Thurston College
  • Wesley College
  • Other Resources
  • Related Links
  • Site Map
  • Contact us

  • Lamudi - Sri Lanka's Best Real Estate Marketplace